Tuesday, June 25, 2013

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் 192 செவிலியர் கண்காணிப்பாளர் பணி இடங்கள் புதிதாக உருவாக்கம்
































தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் சுகாதார துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களின் பணி திறனை மேம்படுத்தும் பொருட்டு மாவட்டம் வாரியாக ஒரு மாவட்டத்திற்கு 6 செவிலியர் கண்காணிப்பாளர் வீதம் 32 மாவட்டத்திற்கு 192 செவிலியர் கண்காணிப்பாளர் பணி இடங்கள் உருவாக்க பட்டுள்ளது.


இந்த 192 செவலியர் கண்காணிப்பாளர் பணி இடங்கள் உருவாக காரணமாக இருந்தவர்கள் நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் I.A.S அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு ஹெழ்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்பட முழுமுதற்  காரணமான நமது மரியாதைக்குரிய திரு .பங்கஜ் குமார் பன்சால் I.A.S அவர்களுக்கும் செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
 
அதற்கான அரச ஆணை உங்கள் பார்வைக்கு







 

இதே போன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருகிறது. அதை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் 
பணி நிரந்தரம்  பெறுவதோடு  மட்டுமல்லாமல்  மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், நமக்காக உண்மையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நமது சேவையை இன்னும் சிறப்பாக செய்து தமிழகத்தை  சுகாதார துறையில் உலகத்திலேயே முதன்மையான மாநிலமாக கொண்டு வர சந்தோசமாக பாடுபடவேண்டும்.

என்றும் செவிலியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருப்போம்.


நன்றி