Monday, December 30, 2013

Super-specialty hospital: 150 nurses to be recruited











Around 150 healthcare workers, including nurses and paramedical staff from government hospitals, will undergo counselling on Monday for recruitment to the super-specialty hospital that is coming up on Omandurar Estate.

It is learnt that the State government has created 262 posts for nurses and paramedical staff, of which 16 are on consolidated pay while the rest will be recruited as regular staff. The paramedical staff includes technicians, pharmacists and physiotherapists. The counselling will be held at the office of the Directorate of Medical Education. An order to this effect was issued by the government last Thursday.

Nurses on contract said they are happy with the development as this would result in regularisation of at least a few of them. 

“Earlier, we learnt that the government had planned to call for applications for nurses on contract basis. There are at present 300 vacancies for nurses in government hospitals. We hope that the process of counselling will be taken up for these vacancies soon,” said Ravi Seetharaman, vice-president of Tamil Nadu Government Contract Nurses Welfare Association.

The Medical Recruitment Board has also called for applications for the post of senior and junior consultants, duty doctors and registrars for the hospital. Health department sources said that senior consultants with around 10-15 years’ experience may be paid around Rs. 1.5 lakh, whereas a duty doctor could earn Rs. 50,000 a month. The government is yet to advertise for the post of hospital administrator, who is expected to be a non-medical person.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/superspecialty-hospital-150-nurses-to-be-recruited/article5517170.ece


Saturday, December 28, 2013

செவிலியர்களுக்கென ஒரு மாத இதழ்-நன்றி உமாபதி

















செவிலியர்களுக்கென ஒரு மாத இதழ் வெளியிடும் முயற்சியில் நமது அன்பிற்குரிய நண்பர் திரு.உமாபதி அவர்கள் இறங்கி உள்ளார்.

விரைவில் மாத இதழ் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போது மின்னிதழாய், விரைவில் மாத இதழாய்,

அதற்கு ஒரு முன்னோட்டமாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல் வெளியீடு அருண் வீடு, விளாப்பாக்கம், ஆற்காட்டில் நடைபெற்றது, செய்திமடலுடன் இடமிருந்து, கதிர், உமாபதி, கலைச்செல்வி( வேலூர் மாவட்ட செயலாளர், ஒப்பந்த செவிலியர்கள் சங்கம்) அருண், கிருஷ்ணகுமார், கண்ணன் ஆகியோர்.

இதழுக்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

Friday, December 27, 2013

சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் 150 புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் - அரசு ஆணை வெளியிடு-கவுன்சிலிங்-30/12/2013






மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆசியால் சென்னையில் டெல்லி AIIMS மருத்துவமனைக்கு இணையாக ஓமந்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைய உள்ளன. அதை முன்னிட்டு அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க அங்கு 26 வகை பிரிவுகளிலும் 216 நிரந்த பணி இடங்கள் தோற்றுவிக்க பட்டுள்ளன.

அதில் 150 நிரந்தர பணி இடங்கள் செவிலியர்களுக்காக ஒதுக்க பட்டுள்ளன.

இந்த 150 பணி இடங்களுக்கு மீதி உள்ள பிரிவுகளில் பணி இடங்களுக்கும் வரும் 30/12/2013 பொது மாறுதல் கலந்தாய்வு DME  வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்க பட்டுள்ள சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து கவுன்சிலிங் வரும்பொழுது கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். சீனியாரிட்டி முறை பின்பற்றப்படும்.

இந்த கவுன்சிலிங் மூலம் ஏற்படும் காலி பணி இடங்கள் பின்னர் 2007 BATCH சேர்ந்த தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தர கவுன்சிலிங் மூலம் நிரப்பபடும்.

ஏற்கனவே ஒரு 14 மருத்துவமனைகளில் ஒரு  மருத்துவமனைக்கு 8 செவிலியர்கள் வீதம் 112 நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கபட்டுள்ளது.

ஏற்கனவே DMS மற்றும் DME 250 கும் மேற்பட்ட நிரந்தர செவிலியர் காலி பணி இடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிகின்றன.

எப்படியும் 500 மேற்பட்ட 2007 BATCH சேர்ந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் இன்னும் ஒரிரு மாதங்களில் செய்யபட வாய்ப்புள்ளது.





செவிலியர் பணி இடங்கள் அவுட்சோஸ் முறையில் ஓமந்தூர் மருத்துவமனையில் போடப்பட இருப்பதாக இதற்கு முன்னர் ஒரு தகவல் இருந்தது. அதன் பின்னர் தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களை சந்தித்து இது பற்றி தெரிவித்து, அப்படி ஒரு சூழ்நிலை நிலவினால் எங்கள் நிலையை அரசுக்கு தெரிவித்து தயவு செய்து நிரந்தர பணி இடங்களை உருவாக்கி 5 வருடமாக தொகுப்பூதியத்தில் இருக்கும் செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டோம். செயலர் அவர்களும் கண்டிப்பாக உதவி செய்வதாக கூறினார். அவர் சொன்னது போலவே செய்தும் கொடுத்து உள்ளார்.

இவ்வாறு நிரந்தர பணி இடங்களை உருவாக்க அனுமதி அளித்த எங்கள் இதயதெய்வம், கருணைதாய், ஓவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்கள் வாழ்விலும் ஒளியேற்றி கொண்டு இருக்கும் எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு 5000 தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்கிறோம். தமிழக முதல்வர் அம்மா ஆசைப்படி தமிழக மக்களுக்கு சிறப்பான சேவை செய்து அம்மா அவர்களுக்கும் அரசுக்கும் நற்பெயர் பெற்று தருவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இதே போல் கிராமபுறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.

கவுன்சிலிங் ஆணை மற்றும் சர்வீஸ் பர்டிகுலர்ஸ்







by RAVI






Tuesday, December 24, 2013

"108' ஊழியர்களுக்கு "1008' பிரச்னை- தொகுபூதிய செவிலியர்களுக்கு ?








மதுரை: ஜன., 8 இரவு 8 மணி முதல் ஜன., 9 இரவு 8 மணி வரை, தமிழகத்தில் ஆம்புலன்ஸ்கள் ஊழியர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மதுரையில் நடந்த, ஆம்புலன்ஸ் ஊழியர் சங்க கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: "108' ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், வாகனம், மருத்துவ உபகரணங்கள், மருந்து, தொழிலாளர்களின் சம்பளத்தை, அரசு ஏற்றுக் கொள்கிறது; ஆனால் நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் உள்ளது. டிரைவர், அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் "கால் சென்டர்' ஊழியர்கள் என, 3000 பேர் பணி செய்தாலும், தொழிலாளர் சட்டம் பின்பற்றப்படுவதில்லை.
மேலும், 12 மணி நேர பணி, கூடுதல் பணி நேரத்திற்கு தனியாக சம்பளம் தருவதில்லை; 12 மணி நேரத்திற்கு பிறகும், யாராவது அழைத்தால், தொடர்ந்து பணியாற்றச் சொல்கின்றனர். ஐந்து ஆண்டுக்கு முன், பணியில் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக சேர்பவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியின்றி மாதம், 6900 முதல் 7900 ரூபாய்வரை வழங்கப்படுகிறது.
"போனஸ்' இல்லை. குறைந்தபட்ச சம்பளத்தில், அடிக்கடி மாற்றம் செய்வதால், பணி செய்ய முடியவில்லை. பணிச்சுமையால், 200பேர் வெளியேறி விட்டனர். அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டதால், ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு, எங்கள் சேவையை எதிர்பார்க்கின்றனர். இதனால், விபத்தில் அடிபட்டவர்களை, உடனடியாக கொண்டுவர முடியவில்லை. அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 27ல், நாமக்கல்; டிச., 31ல் திருவண்ணாமலை; ஜன.,4ல், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக, ஜன., 8 இரவு 8 மணி முதல், ஜன.,9 இரவு 8 மணி வரை, தமிழகத்தில் அனைத்து ஊழியர்களும், ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், என்று கூறினர்.

சூரியன் மறைந்தது-மரியாதைக்குரிய PD பங்கஜ் சார் அவர்கள் பணி இடமாற்றம்

மரியாதைக்குரிய PD பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் இன்று 
TNHSP யில் இருந்து 
மெட்ரோ ரயில் திட்ட இயக்குனராக பணி இட மாற்றம் செய்ய பட்டார்.






தமிழகத்தை சுகாதார துறையில் முன்னேற்றம் அடைய செய்ய பல்வேறு சிறப்பு வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு இதுவரை அறியபடாமல் இருந்த PD என்ற ஒரு வார்த்தையை தமிழகம் முழுவதும் செய்தவர்.  மிக சிறந்த திட்ட அலுவலர்.

400 மேற்பட்ட புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக பங்கஜ் குமார் சார் அவர்களின் பங்கு முக்கியமானது. இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதர்.


ஒரு சில குறைகள் PD அவர்கள் இருந்தாலும் அவரது பணி மகத்தானது. ஏசி அறையில் உக்கார்ந்துகொண்டு ஜாலியாக சம்பளம் வாங்காமல் தமிழகம் முழுதுவம் சுற்றி பல மக்கள் நல பணிகளை மேற்கொண்டு உள்ளார். 

ஒரு சில குறைகள் என்று கருதபட்டது என்னவெனில் மக்கள் நலனுக்காக மருத்துவதுறை ஊழியர்கள் மேல் மிக அதிகமான பணி சுமை ஏற்ற பட்டது. இதனால் மருத்துவ துறை ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானர்கள். இதன் எதிரொலியாக கடந்த 19 தேதி அன்று மரியாதைக்குரிய PD அவர்கள் ஊழியர் விரோத போக்கை கடைபிடிகிறார் என்றும் மேலும்  சில கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம் நடந்த இருந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த போராட்டம் ஒத்தி வைக்க பட்டது.

இன்று  PD பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் TNHSP யில் இருந்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குனராக பணி இட மாற்றம் செய்ய பட்டார்.

இவரை போன்ற அதிகாரிகள் ஒரு துறையில் பணி புரிய அந்த துறை புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.விரையில் சென்னையில் மெட்ரோ ரயில் வரும் என்று எதிர்பார்க்கலாம். 

Monday, December 23, 2013

DMS ஆணை – JD - உழைக்கும் செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக மாதம் மாதம் தரப்பட வேண்டும்.

தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த மரியாதைக்குரிய PD மற்றும் DMS சார் அவர்களுக்கு எங்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி




இரண்டு வாரம் முன்பு பல மாதங்களாக கேட்டும் எங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை என மரியாதைகுரிய PD அவர்களிடம் தெரிவித்து இருந்தோம் என்ற தகவல் உங்கள் அனைவர்க்கும் தெரியும்.

அடிகின்ற கைதான் அணைக்கும் என்பது போல மரியாதைக்குரிய PD அவர்கள் மக்கள் நலனுக்காக சில தவிர்க்க முடியாத சில பணி சுமைகளை நம் மேல் ஏற்றினாலும் கூட நமக்கு ஊதியம் வரவில்லை என்ற தகவலை தெரிவித்த உடன் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதற்கு ஒரு சிறு எடுத்துகாட்டு கன்னியாகுமரி, கரூர் MMU, சிதம்பரம் GH பணி புரியும் செவிலியர்கள் பல மாதங்கள் கேட்டும் கெடைக்காத ஊதியம், PD சார் எடுத்த நடவடிக்கை காரணமாக அலுவலகத்தில் உடனே செவிலியர்களை உடனே அழைத்து கையில் கொடுக்க பட்டுள்ளது.

இதற்காக சில மாவட்டங்களில் சில அதிகாரிகள், அலுவலர்கள் செவிலியர்களை கடிந்து கொண்டு உள்ளார்கள்.
கடிந்து கொண்ட அதிகாரிகளிடம் எங்கள் தாழ்மையான வேண்டுகோள், எங்களுக்கு, புரியவில்லை ஆறு மாதமாக சம்பளம் வரவில்லை என்றால் நாங்கள் வீட்டு வாடகை, பயண செலவு, உண்ண உணவு, குடும்ப செலவு, பெற்றோருக்கு கொடுக்க பணத்திற்கு என்ன செய்வது, கடன் என்ற பெயரில் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

இன்று  (23/12/2013) அனைத்து JD அலுவலகத்திற்கும் மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களால் தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக சுற்றிக்கை அனுப்பபட்டுள்ளது.

அந்த சுற்றிகையில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக மாதம் மாதம் தரப்பட வேண்டும் என்று DMS அலுவலகத்தால் பல முறை JD அலுவலங்களுக்கு தெரிவிக்கபட்ட போதிலும்,  இது சமந்தமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பட்ட போதிலும் பல்வேறு மாவட்டங்களில் தொகுப்பூதிய செவிலியர்கள் பலர் பல மாதங்களாக ஊதியம் பெறாமல் பணியாற்றி வருவதாக TNHSP, CHIFE MINISTER CELL  அலுவலங்களுக்கு மனுக்கள், மற்றும் MAIL அனுப்ப பட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு மாவட்டங்களில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக வழங்க படாதது மட்டுமல்லாமல், இது சமந்தமாக சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்தள்ளது தெரியவந்துள்ளது.
 இது சமந்தமாக அனைத்து JD அலுவலகங்ககளும் தங்கள் கட்டுபாட்டில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் கடந்த மாதம் வரை ஊதியம் பெற்று விட்டனரா, பெறவில்லை எனில் எத்தனை மாதம் பெறவில்லை, எந்த எந்த மாதம் இடையில் பெறாமல் உள்ளனர் என்பதை உடனடியாக DMS அலுவலகத்திற்கு வரும் 26/12/2013 அன்றுக்குள் தெரிவிக்க வேண்டும்.
 இது மிகவும் அவசரம். இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள். நடவடிக்கை எடுக்க பட வில்லை எனில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மேல் மேல்நடவடிக்கை எடுக்க படும்.

எனவே தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியம் பெறவில்லை எனில் தங்களது JD ஆபீஸ் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.




 



Saturday, December 21, 2013

THE HINDU-20/12/2013 - நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே மாதத்தில் 202 பிரசவம் - தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை!









 நவம்பர் மாதம் - 202 பிரசவம்

தமிழகத்தின் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் முன்மாதிரி ஆரம்ப சுகாதார நிலையம்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஒரே மாதத்தில் 202 பிரசவங்களைப் பார்த்து சாதனை படைத்துள்ளது. தமிழக அளவில் இதுவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் இந்த சாதனையை எட்டியதில்லை.

தமிழகத்தில் சுகாதாரத் துறையின்கீழ் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கர்ப்பிணிகளை பதிவு செய்து, அவர்களுக்கான பிரசவம் மற்றும் தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், சைதாபேட்டை சுகாதார மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மேடவாக்கம், நந்தி வரம், இடைக்கழிநாடு ஆகியவை மேம் படுத்தப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் இயற்கையாக பிரசவிக்க முடியாத கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.

இங்கு கடந்த நவம்பர் மாதம் மட்டும் 202 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இது தமிழ கத்தை பொறுத்தவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையமும் எட்டாத இலக்காகும். இது குறித்து சைதாப்பேட்டை துணை இயக்குநர் சு.ராஜசேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும்விதமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதற்காக 3 செவிலியர்கள், 5 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியதன் விளைவாகவும், ஊழியர்களின் பணி அர்ப்பணிப்பு காரணமாகவும், ஆட்சியர் கா.பாஸ்கரன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் நிர்வாக ரீதியாக அளிக்கும் ஒத்துழைப்பு காரணமாகவும், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் 202 பிரசவங்கள் பார்க்கப்பட்டு, தமிழக அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. குழந்தை பெற்ற தாய்மார்கள் காத்திருப்பதற்கான குடில், பசுமை நிறைந்த சூழலின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு குழந்தைப் பெற்றுக்கொள்ள வரும் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுகாதார நிலையத்தில் உள்ள அறைகள் அனைத்தும், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தூய்மை உறுதி செய்யப்படுகிறது.

இதற்கு முன்பு சைதாப்பேட்டை சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 196 பிரசவங்களே தமிழக அளவில் சாதனையாக இருந்தது. இதே மாவட்டத்துக்கு உள்பட்ட நந்திவரம் தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை 887 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதில் 386 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இதில் 603 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இதேபோல் அனைத்து இடங்களிலும் நடந்தால் அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் 6 நிரந்தர செவிலியர்களை போடுங்கள் என்று உரிமையோடு கேட்கலாம்.

மேலும் ஆரம்ப சுகாதர நிலைய செவிலியர்களுக்கு ஒரு வேண்டுகோள், முடிந்த வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பாருங்கள், ஆனால் பிரசவத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கும், தாய்க்கும்சேய்க்கும் ஏதேனும் பாதிப்பு வர வாய்பிற்குகும் பட்சத்தில் தயவு செய்து உடனே அருகே உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி விடுங்கள்.

பார்த்தோகிராம் தயவு செய்து போடுங்கள். தாயின் Hb levelai தெரிந்து பின்னர் பிரசவம் பாருங்கள்.

இதையெல்லாம் கவனிக்காமல் சில இடங்கள்  பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு பின்னர் அந்த பிரச்சனைகளை தீர்க்க பெருமுயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

Friday, December 20, 2013

14 மருத்துவமனைகளில்(CASUALTY)-மருத்துவமனைக்கு 8 நிரந்த செவிலியர்கள் வீதம் 112 புதிய செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிப்பு







மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு செயலர் மற்றும் TNHSP PD பங்கஜ் குமார் பன்சால் அவர்களின் சிறப்பான திட்டங்களால் தமிழக மருத்துவ துறை சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. தாலுக மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதனை வெற்றி கரமாக நடைமுறை படுத்தி வருகிறார். 

மேலும் செவிலிய துறைக்கு பல நன்மைகளை செய்து உள்ளார். குறிப்பாக கிராமபுறங்களில் ஏற்கனேவே 192 நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி 192 தொகுபூதிய செவிலியர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.

அதே போல் தற்பொழுது விபத்துகளில் அதிக உயிரிலப்பு ஏற்படுவதால் அதை தடுக்கும் நோக்கில் முதல் கட்டமாக கீழே உள்ள 14 மருத்துவ மனை அவசர வார்டுகளில் 4 மெடிக்கல் ஆபீசர் மற்றும் 8 நிரந்தர் செவிலியர் பணி இடங்கள் உருவாக்கி அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது. இதன் மூலம் 2007 BATCH தொகுப்பூதிய செவிலியர்கள் 112 பேருக்கு நிரந்தர பணி விரைவில் கிடைக்கும்.. இந்த இடங்கள் உருவாக்கபட முழுகாரணமும் பங்கஜ் குமார் பன்சால் சார் அவர்கள் தான். அதற்கான அரசானை கீழே உள்ளது.

மேலும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் மற்றும் அலவன்சு 6 மாதமாக வரவில்லை என்று தெரிவித்த அடுத்த மூன்று நாட்களில் அனைத்து JD மற்றும் DD அவர்களுக்கு இந்த பிரச்சனையை தெரிவித்து  ஊதியத்தை பெற உதவினார்.

பல நிறைகள் சில வருத்தங்கள் மட்டுமே.

மருத்துவ துறையில் மக்கள் நலனுக்காக வேலை பார்க்கும் ஊழியர்களின் உடல் நலனும் மன நலனும் சிக்கலான நிலையில் உள்ளது.

கிராம புறங்களில் ஒரு செவிலியருக்கு 12 மணி நேர பணி, DEPUTATION DUTY, CALL DUTY, DEPUTATION காரணமாக  2 மணி நேரம் பயணம், கால் டூட்டி,  மீதி நேரத்தில் தூங்கி,  குடும்பத்தையும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் பெரும்பாலான தொகுப்பூதிய செவிலியர்கள் உடல் நலன் பாதிப்பை காட்டிலும், மிகுந்த அளவு மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

மரியாதைக்குரிய பங்கஜ் குமார் பன்சால் சார் அவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்,  மருத்துவர் மற்றும் செவிலியர் நிரந்தர பணி நியமனங்களை போதுமான அளவு ஏற்படுத்தி, தயவு செய்து எங்களுக்கு மகிழ்ச்சியான, மனநிறைவோடு பணி புரியும் சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறோம். 

நன்றி.













Thursday, December 19, 2013

RENEWAL CERTIFICATE SENT BY TAMILNADU NURSING COUNCIL


அனைத்து செவிலியர்களும் தங்களது பதிவை ஆன்லைன் மூலம் புதுபிக்க வேண்டும் என்று ஒரு சில மாதம் முன்பு தெரிவித்து இருந்தோம்.

அவ்வாறு பதிவு புதுப்பித்தவர்களுக்கு புதுப்பித்த சான்றுகள் வந்து கொண்டு இருக்கின்றன.

ஏற்கனவே பதிந்து இன்னும் சான்று வரவில்லை எனில் http://www.tnnconlinerenewal.com/ இந்த வெப்சைட்டிற்கு சென்று மேலே உள்ள CHECK STATUS என்ற OPTION கிளிக் செய்து உங்களுடைய Acknowledgement கார்டில் உள்ள நம்பரை என்ட்டர் செய்து செக் செய்யவும். REMARKS என்ற காலத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்க பட்டு இருக்கும். பெரும்பாலும் UPLOAD YOUR APPOINTMENT ORDER WITH YOUR NAME என்று இருக்கும். தங்களுடைய
APPOINTMENT ORDER பெயர் இல்லையெனில் ORDERஇன் பின்னல் இருக்கும் ANNEXURE இல் தங்கள் பெயர் உள்ள பக்கத்தை ஸ்கேன் செய்து வைத்து கொண்டு முதலில் இருந்து RENEWAL செய்யவும். பணம் ஒருமுறை செலுத்தி இருந்தால் மீண்டும் செலுத்த தேவையில்லை.


1. http://www.tnnconlinerenewal.com/

2. கிளிக் CHECK STATUS

3. ENTER Your Acknowledgement NO. TNNC-REN-20130709841


புதுபிக்காதவர்கள் வரும் 30th June 2014. புதுப்பித்து விடுங்கள். இல்லையெனில் அதற்காக LATE FINE செலுத்த நேரிடும்.

Renewal to be done from 1st July 2013 to 30th June 2014. If anybody fails to do so within the stipulated period, penalty will be collected".

இப்போது ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தும் வசதி தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலால் செய்யப்பட்டுள்ளது.

வேறு ஏதேனும் தகவல் தேவைபட்டால்   

தொடர்பு கொள்ளவும்.
ரவி - 9789 3435 91

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில்- 044 43524504










Sunday, December 15, 2013

24 மணி நேரமும் பணியில் இருப்பவர்கள் செவிலியர்கள் மட்டுமே ஆனால் 5 வருடங்களுக்கு மேலாக தொகுபூதியத்தில் இருப்பதும் ?????????????????????????










தினமலர்        பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013,07:07 IST


ஷிப்ட்' முறையில், நர்ஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.


வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெரும்பாலான நாட்களில், டாக்டர்கள் இல்லாததால், வெறிச்சோடி கிடக்கிறது. அதனால், உரிய நேரத்தில் அவசர மற்றும் முதலுதவி சிகிச்சைக்கு வழியின்றி, அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பேளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு, அவசர மற்றும் முதலுதவி சிகிச்சை அளித்தல், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கொண்டு வருகிறது.


வாழப்பாடி, திருமனூர், ஆரம்ப சுகாதார நிலையங்களை வழிநடத்தும், வட்டார சுகாதார நிலையமாகவும் 
விளங்கி வரும், பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கி பணிபுரிவதற்கு வசதியாக, பணியாளர் குடியிருப்புகள் உள்ளன.
பேளூர், பேரூராட்சி என்பதால், 24 மணி நேரமும், பிரசவம் பார்ப்பதற்கு வசதியாக, படுக்கை வசதியுடன் கூடிய உள்நோயாளி பிரிவும், ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை பிரிவுகளும், ஹெச்.ஐ.வி., தொற்றுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் நம்பிக்கை மையமும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வருகிறது.


இந்நிலையில், டாக்டர் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள் தங்காததால், ஓரிரு குடியிருப்புகளை தவிர, மற்ற குடியிருப்புகள், பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, காலை, 9 மணியில் இருந்து, 11 மணி வரை மட்டுமே, டாக்டர்கள் வந்து செல்கின்றனர்.


அலுவலகப்பணி, வாராந்திர விடுமுறை எனக்கூறி, டாக்டர்கள் வராததால், பெரும்பாலான நாட்களில், பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெறிச்சோடியே கிடக்கிறது. குறிப்பாக, வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை, அறிவிக்கப்படாத விடுமுறையாகவே மாறிவிட்டது. "ஷிப்ட்' முறையில், நர்ஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.
அதனால், உரிய நேரத்தில், அவசர முதலுதவி சிகிச்சைக்கு கூட, டாக்டர்களின் ஆலோசனையை பெற வழியின்றி, பேளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும், சுகாதார நிலைய குடியிருப்புகளில் தங்கி, தினந்தோறும் சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, December 14, 2013

Better facilities in PHCs sought-THE HINDU










After conducting a survey in four upgraded Primary Health Centres (PHCS), twelve PHCs and twenty health sub-centres in the district recently, Palayamkottai-based Human Rights Education and Protection Council released its findings here on Saturday.

Some of the patients, mostly women, who allegedly suffered owing to the “poor medical assistance” extended to them in the PHCs, recounted their “harrowing experience” during the release of the NGO’s findings.

Based on the findings of its survey, the NGO has recommended to the State Government that all PHCs should be upgraded as 30-beded hospitals with X-ray and scan facilities and quarters constructed nearby for the medical officers and the nurses posted in these hospitals. Qualified siddha doctors should be posted in the PHCs and siddha formulations in adequate quantity should be stocked. Vacancies in the PHCs should be filled-up and the services of conservancy workers employed on contract basis be regularized.

Drinking water, toilets with water facility, ambulance etc. should be ensured in the PHCs. Village Health Nurses should be asked to stay in the villages where they work and to give timely medical assistance to the pregnant women.

Tirunelveli MP S.S. Ramasubbu, formerly Dean and orthopaedic surgeon, Tirunelveli Medical College Hospital, S. Ramaguru, formerly Registrar (In-charge), Manonmaniam Sundaranar University and Project Director, Human Rights Education and Protection Council K.A. Manikumar and others spoke.


http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/better-facilities-in-phcs-sought/article5461711.ece